51 நாட்களின்பின் சுமூகமான முறையில் கைதடி பலநோக்குக் கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் விநியோகம்
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வந்திருந்தனர்.
கடந்த பல நாட்களாக நாடளாவிய ரீதியில் லங்கா எரிபொருள் நிலையத்திற்கு (Ceypetco) எரிபொருள் விநியோகிக்கப் படாது இருந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் கைதடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிலையத்திற்கு 51 நாட்களின் பின் பெட்ரோல் கிடைக்கப் பெற்றது.
இவ்வாறு நேற்றைய தினம் கிடைக்கப்பெற்ற 6600 லிட்டர் பெட்ரோலினை கிராம சேவகர்களால் வழங்கப்பட்ட எரிபொருள் அட்டை இருப்பவர்களுக்கு எந்தவித குழப்பமுமின்றி சுமூகமாக எரிபொருள் வழங்கிவைக்கப்பட்டது.