நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் தொடர்ச்சியாக மக்களுக்கு எவ்வித குழப்பமுமின்றி கடந்த 4 நாட்களாக கிராமசேவகரினால் வழங்கப்பட்டுள்ள எரிபொருள் அட்டை உள்ளவர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டு வருவதாக சாவகச்சேரி நுணாவில் ஐஓசி நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் வைத்திலிங்கம் சிவராசா தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்.
எமது ஐஓசி எரிபொருள் நிலையத்தினால் கடந்த 3 நாட்களாக காலை 9 மணியிலிருந்து இரவு 11 மணி வரை மக்களுக்கு எவ்வித குழப்பமுமின்றி ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவுகளில் வசிக் கும் மக்களுக்கும் (கிராமசேவகரினால் வழங்கப்பட்டுள்ள எரிபொருள் அட்டை உள்ளவர்களுக்கு ) எரிபொருள் வழங்கி வருகின்றோம்.
இவ்வாறு குழப்பமின்றி எரிபொருள் வழங்குவதற்கு பொதுமக்களும் கிராமசேவகர்களும் இராணுவத்தினரும் சாவகச்சேரி போலீஸாரும் மற்றும் எமது நுணாவில் ஐஓசி நிரப்பு நிலையத்தின் ஊழியர்களும் ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றனர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அத்துடன் கடந்த 2 நாட்களில் எமது எரிபொருள் நிலையத்தினால் பொதுமக்களுக்கு 21844 லிட்டர் எரிபொருள் விநியோகித்துள்ளோம் தொடர்ச்சியாக அனைத்து மக்களுக்கும் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளின் ஊடாக எரிபொருள் வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம் ஆகவே அனைத்து மக்களும் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு கிராமசேவகரினால் வழங்கப்படும் எரிபொருள் அட்டையைப் பெற்று எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்கு தயாராக இருங்கள் என தெரிவித்தார்.