உயிராபத்தை ஏற்படுத்தும் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள்.

வவுனியா ஓமந்தை பகுதியில் அரச உத்தியோகத்தர்களிற்கு வழங்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்திற்கு ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையாகச் செல்லும் வீதியில் உள்ள புகையிரத கடவை பாதுகாப்பற்ற புகையிரத கடவையாக காணப்படுகின்றது.

இலங்கையில் கூடுதலான பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் காப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பார்கள். ஆனால் இந்த கடவையில் காப்பாளரும் கடமையில் இல்லை.

இவ் வீதியால் பாடசாலை மாணவர்கள் உட்பட அனைவரும் உயிராபத்துடன் பயணிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. இதேகடவையில் இரண்டு வருடங்களிற்கு முன்னர் தந்தையும், மகனும் உயிரிழந்த அவலம் நிகழ்ந்தேறி இருக்கின்றது.

எனவே இதுவிடயத்தில் சம்மந்தப்பட்ட திணைக்களம் மற்றும் இம்மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் கவனம் செலுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழியேற்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *