முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜெனரேட்டர் தேவைகளுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு ஒரு முன்னோடி திட்டமாக மொபைல் எரிபொருள் விநியோகம் (Mobile Fuel Dispensers) பயன்படுத்தப்படும். அத்துடன் முச்சக்கர வண்டிகள், Delivery Bikes மற்றும் கான்களுக்கு (Cans) எரிபொருள் நிலையங்களுக்கு அப்பால் திறந்தவெளிகளில் இந்த எரிபொருள் ட்ரக் (Fuel Dispensers) பயன்படுத்தப்படும்.
இது விரைவில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சர் காஞ்சன விஜயசேகர ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.
