36 நாட்களாக எரிபொருளின்றி மூடப்பட்டிருந்த பேருவளை மக்கொன எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் மின்சாரம் தடை செய்யப்பட்ட வேளை 25 லீற்றர் பெற்றோலை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
நிலத்தடி தாங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெற்றோல் இவ்வாறு எடுக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். பிளாஸ்டிக் கானில் 25 லீற்றர் பெற்றோலை நிரப்பி உரப்பையினால் மூடி எடுத்து முச்சக்கரவண்டியின் பின்னால் மறைத்து வைத்து கொண்டு சென்றுள்ளார்.