நுணாவில் ஐஓசி எரிபொருள் நிலையமூடாக எரிபொருள் விநியோகம் செய்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு யாழ் மாவட்ட செயலகம் சாவகச்சேரி பிரதேச செயலருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டதையடுத்து சாவகச்சேரி நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் 6000 லீட்டர் பெட்ரோல் 14/7/2022 வியாழக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து விநியோகிக்கப்பட்டது.
1000 பொது மக்களுக்கு ஆயிரம் ரூபாவிற்கும் 450 அரச உத்தியோகத்தர்களுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாவிற்கும் 300 முச்சக்கர வண்டிகளுக்கு இரண்டாயிரம் ரூபாவிற்கும் 50 கார்களுக்கு மூவாயிரம் ரூபாவிற்கும் எரிபொருள் வழங்கப்பட்டது என
சாவகச்சேரி நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் வைத்திலிங்கம் சிவராசா தெரிவித்தார்.