கொழும்பு மாத்திரமல்லாது ஏனைய மாகாணங்களுக்கும் இன்றைய தினம் எரிவாயு விநியோகிக்கப்படுமென லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, வெளி மாவட்டங்களுக்கு 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிகக்கப்டவுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொழும்பு மாவட்டத்தில் இன்று 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிகக்கப்டவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு விநியோக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸாரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனததின் எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் விநியோகிப்பது தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.எவ்வாறாயினும், ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் நிலையங்களில் தொடர்ந்தும் வாகன வரிசை நீண்டு செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.