பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைதாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் அலுவலகம் முன்பாக இவ்வாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைதாக்குதல் மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்
இதேவேளை காலி முகத்திடலில் போராட்டகளத்தில் மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்
காலி முகத்திடலில் போராட்டகளத்தில் இரண்டு குழுக்களுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த குறித்த நால்வர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.