நுணாவில் ஐஓசி எரிபொருள் நிலையமூடாக எரிபொருள் விநியோகம் செய்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு யாழ் மாவட்ட செயலகம் சாவகச்சேரி பிரதேச செயலருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது
மேற்படி விடயம் தொடர்பாக 14/7/2022 ஆம் திகதி தொடக்கம் நுணாவில் எரிபொருள் நிரப்பு நிலையமூடாக பெற்றோல் விநியோகத்தினை மேற்கொள்ள நடைமுறைப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது
சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொது மக்கள் மற்றும் அத்தியாவசிய சேவையிலுள்ள உத்தியோகத்தர்களுக்கான விநியோகத்தினை விநியோகத்தினை மேற்கொள்ளவும்
அனைத்து எரிபொருள் விநியோகத்தினையும் எரிபொருள் விநியோக அட்டைக்கு மாத்திரம் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும்
இனிவரும் காலங்களில் எரிபொருள் விநியோக அட்டைக்கு மாத்திரம் எரிபொருள் வழங்க உள்ளமையால் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் சூழ காத்திருக்கும் வாகன ஓட்டுநர்களை பொலிசாரின் உதவியுடன் உரிய அறிவுறுத்தலை வழங்க நடவடிக்கை எடுக்கவும்
தங்களது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊடாக எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதுடன் அவர்கள் மூலமாக எரிபொருள் விநியோக அட்டையில் எரிபொருள் விநியோகித்தமைக்கான பதிவினை மேற் கொள்ளவும் இவ் விநியோகத்தின் போது மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் பிரசன்னமாகி இருப்பர்
காலை 8.00 பணியிலிருந்து குறிக்கப்பட்ட அளவுகளில் மோட்டார் சைக்கிள், சைக்கிள், கார், முச்சக்கரவண்டி வாகனங்களுக்கு மட்டும் எரிபொருள் விநியோக அட்டையில் உரிய பதிவுகளை மேற்கொண்டு எரிபொருள் விநியோகத்தினை மேற் கொள்ளவும் என அரச அதிபர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்