இலங்கை அரசியலமைப்பின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் தற்போதுள்ள அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு, சுங்க விதிகள் மற்றும் ஏனைய அனைத்து சட்டங்களுக்கும் அமைய ஜனாதிபதி, அவரது பாரியார் மற்றும் பாதுகாவலர்கள் இருவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து மாலைத்தீவு நோக்கி செல்வதற்கு விமானப் படைக்குச் சொந்தமான விமானமொன்றை 2022 ஜூலை மாதம் 13ஆம் திகதி அதிகாலை வழங்கினோம் என்று இலங்கை விமானப் படைத் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.
ஐனாதிபதிக்கு விமானம் வழங்கியது தொடர்பாக விமானப்படை அறிக்கை
