கொரோனா வைரஸ் தொற்றை ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸ் 30 நாட்கள் வரை குளிர்சாதன பெட்டி அல்லது குளிரூட்டப்பட்ட இறைச்சி மற்றும் மீன் உள்ளிட்ட பொருட்களில் உயிர் வாழக்கூடுமென கண்டறியப்பட்டுள்ளது.
பயன்பாட்டு மற்றும் சுற்றுச்சூழல் நுண்ணுரியியல் இதழில் அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின் ஊடாக இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் மீன் உள்ளிட்ட பொருட்களில் SARS-CoV-2 வைரஸ் உயிர் வாழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆரியாவில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவல் அடைவது கண்டறியப்பட்டது என்பதை அறிந்ததன் பின்னர் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.