தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவுக்கு வரும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் (ACBOA) தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நிலவும் எரிபொருள், எரிவாயு நெருக்கடி மற்றும் அனைத்து பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு காரணமாகவும் அவர் கூறினார். தற்போது பேக்கரியில் 50% உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மீதியும் மிக விரைவில் நின்றுவிடும் என்றார்