ரோகித் சர்மா புதிய சாதனை.. டி20 கிரிக்கெட்டில் இந்தியா புதிய பாய்ச்சல்.. உலக அளவில் முதலிடம்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா ஃபார்மில் இல்லை. அதன் பிறகு நடைபெற்ற தென்னாப்பிரிக்கா தொடரிலும் ரோகித் சர்மா ஓய்வில் இருந்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருந்தது.

ரோகித் அதிரடி

ரோகித் அதிரடி

இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக ரோகித் சர்மா ஒரு மாதம் இடைவெளிக்கு பிறகு களம் இறங்கினார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரோகித் சர்மா 14 பந்துகளை எதிர்கொண்டு 24 ரன்களை சேர்த்து, இந்தியாவுக்கு நல்ல அடித்தளத்தை கொடுத்தார். இதேபோன்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியிலும் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 20 பந்துகளில் 31 ரன்களை ரோகித் சர்மா விளாசினார்.

ரோகித் சாதனை

ரோகித் சாதனை

இதில் மூன்று பவுண்டர்களும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் பவர் பிளவில் இந்திய அணி 61 ரன்கள் சேர்த்தது. இதனிடையே பவுண்டரிகளின் அடித்ததன் மூலம் ரோகித் சர்மா , புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 300 பவுண்டர்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் சேர்த்தார். இதேபோன்று மேலும் ஒரு சாதனையை டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி படைத்துள்ளது.

தோல்விக்கு காரணம்

தோல்விக்கு காரணம்

அதாவது கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது பவர்பிளே தான். பவர்பிளேவில் இந்திய அணி கொத்தாக விக்கெட் இழந்து பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியை தழுவியது. அதன் பிறகு ரோகித் சர்மா இந்திய அணிக்கு தலைமை ஏற்றார். ரோகித் சர்மா கேப்டன்சில் இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்று வந்தது. டி20 உலக கோப்பைக்கு பிறகு ரோகித் சர்மா 13 போட்டிகளை இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டார்.

இந்தியா முதலிடம்

இந்தியா முதலிடம்

அந்த 13 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் 2021 டி20 உலக கோப்பைக்கு பிறகு நடைபெற்ற டி20 போட்டிகளில் பவர்பிளேவில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற பெருமையை இந்தியா படைத்துள்ளது. பவர்பிளேவில் இந்திய அணி ஒரு ஓவரில் சராசரியாக 8 புள்ளி 82 ரன்களை அடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக அயர்லாந்து 8.56 ரன்களும் வெஸ்ட் இண்டீஸ் 8 புள்ளி 23 ரன்களும் நியூசிலாந்து 7.88 ரன்களும், ஆஸ்திரேலியா 7.68 ரன்கள் அடித்துள்ளது. இதே போன்று இந்திய அணி தொடர்ந்து விளையாடினால் டி20 உலக கோப்பையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *