ஒரிரு நாட்களில் நாடு வழமைக்கு திரும்பும். ஜனாதிபதி தெரிவிப்பு

எரிவாயு, எரிபொருள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலைமைக்கு ஓரிரு நாட்களில் தீர்வு காணப்படும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு மிகவும் வெற்றியடைந்துள்ளதுடன், கடன் உதவித் திட்டத்தை அடுத்த சில வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான பின்னணி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக, அரச தலைவர்களுடன் தொலைபேசி மூலமாகவும், அந்த நாடுகளின் தூதுவர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

அத்தியாவசிய மருந்துகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன.
இந்திய கடன் வசதிகளின் கீழ் 65 ஆயிரம் மெட்ரிக் தொன் உரங்கள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளன. 44 ஆயிரம் மெற்றிக் தொன் உரங்களை ஏற்றி வரும் முதலாவது கப்பல் நாளை (09) நாட்டை வந்தடையவுள்ளது.

ஜூலை 12 முதல் எரிபொருள், எரிவாயு மற்றும் கொள்வனவுக் கட்டளை வழங்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து பெறப்படும். பல்வேறு விவசாயத் திட்டங்களின் கீழ், நாட்டில் உணவுப் பற்றாக்குறையைத் தடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
21வது திருத்தம் ஏற்கனவே அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான தீர்வுகள் கிடைத்துள்ள இவ்வேளையில், மக்களை தவறாக வழிநடத்தும் எதிர்க்கட்சி அரசியல் குழுக்களின் வேலைத்திட்டம் மிகவும் வருத்தமளிக்கிறது. இது நாட்டை மீண்டும் பின்னுக்குத் தள்ளும்.

சரியான பொருளாதார வேலைத்திட்டத்தின் மூலம் நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு நல்ல நாட்டை கட்டியெழுப்புவதற்கு உறுதுணையாக இருப்பது மக்களின் பொறுப்பும் கடமையும் ஆகும்.

எனவே, தற்போதைய நிலமையை சரியாகப் புரிந்துகொண்டு, தவறான சித்தாந்தங்களில் சிக்கிக் கொள்ளாமல் அமைதியாகவும் புத்திசாலித்தனமாகவும் செயற்படுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *