யாழில் வீடு புகுந்து பெற்றோல் திருட்டு!

யாழில் வீடு புகுந்த திருட்டுக்கும்பல் ஒன்று பெற்றோல் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பவற்றை திருடி சென்றுள்ளது.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு – புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் (புதன்கிழமை) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வீட்டார் நேற்று காலை வீட்டில் இருந்த துவிச்சக்கர வண்டியை காணவில்லை என தேடிய போதே , மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல் திருடப்பட்டு உள்ளமையையும் கண்டறிந்தனர்.

அதனை அடுத்து வீட்டில் பொருத்தியிருந்த பாதுகாப்பு கமராவில் பரிசோதித்த போது , வீட்டினுள் நுழைந்த திருடன் துவிச்சக்கர வண்டியையும் , மோட்டார் சைக்கிளில் இருந்த பெற்றோலையும் திருடிக்கொண்டு செல்வதனை அவதானித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *