யாழ்ப்பாணம் ராணுவ புலனாய்வுத் துறைக்கு கிடைத்த தகவலின்படி ஊர்காவற்துறை போலீசாரும் யாழ்ப்பாண ராணுவ புலனாய்வுத்துறையும் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான 20 கிராம் ஐஸ் போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் யாழ்ப்பாணம் குருநகர் ஐந்து மாடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சலீம் மொகமட் நாசர் 46 வயது என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்..
யாழில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது.
