ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

காங்கேசன்துறை கொல்லன்கலட்டியைச் சேர்ந்த தர்மராசா தர்சிகன் (வயது-10) என்பவரே உயிரிழந்தார்.

ரம்புட்டான் பழத்தை விழுங்கிய சிறுவன் திடீரென சுகவீனமடைந்து மூச்சு எடுக்க அவதிப்பட்ட போது, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் சிறுவன் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

வலிகாமம் கிழக்கு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெபாலசிங்கம் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தார்.

சிறுவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *