கேள்விக்குறியாகும் இலங்கை மாணவர்களின் எதிர்காலம்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் அதிகரித்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற அச்சம் பெற்றோர்களிடையே எழுந்துள்ளது.  

டொலர் தட்டுப்பாடு காரணமாக காகிதங்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இதன்காரணமாக, அப்பியாசக் கொப்பிகள், எழுதுகருவிகள் உள்ளிட்ட ஏனைய பாடசாலை உபகரணங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதனால் மாணவர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

இந்தநிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் பாடசாலை உபகரணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட அதிகமாக வர்த்தகர்கள் விற்பனை செய்வதால் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன் தற்போதைய எரிபொருள் நெருக்கடியில் பேருந்து பயண கட்டணங்களும் அதிகரித்துள்ளதால் மாணவர்களை, பாடசாலைகளுக்கு அனுப்புவதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *