யாழ்ப்பாணத்தில் இருந்து 24.06 அன்று கடத்தப்பட்ட மாணவி மீண்டும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் நேற்று மாலை வைத்தியசாலையில் மாணவி தற்கொலை முயற்சி எடுத்தன் காரணமாக யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் கிளிநொச்சி பொலிஸார் எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை முன்னெடுக்கவில்லை என்று தெரிவித்து அதற்கான நீதி வேண்டி இன்று மூன்றாம் குருக்கு வீதியில் உள்ள யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தில் குடும்ப உறவினர்கள் மற்றும் அயல் வீட்டார்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இதில் சிறுவர்களின் உரிமை பாதுகாக்கவேண்டும்,கடத்தப்பட்ட மாணவிக்கு நீதிகோரவேண்டும் ,பாலியல் கொடுமைகள் தவிர்க்கப்படவேண்டும் என்ற கோரிக்கை உள்ளடங்கிய வாசகத்துடன் மாணவிகள் கவனயீர்ப்பில் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து குடும்ப உறவினர்கள் ஒன்றினைந்த தமது பிள்ளைக்கு நேர்ந்த வன்முறைக்கு நீதியினை நிலைநாட்டவேண்டும் என கோரி மகஜர் ஒன்றும் குடும்ப உறவினர்களால் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தில் ஆணையாளர் ப.கனகராஜ் இடம் கையளிக்கப்பட்டது..

