நாடாளுமன்ற இணையத்தளத்தில் இருந்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் முகவரிகள் மற்றும் அவர்களின் தொலைபேசி எண்கள் திடீரென நீக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற தொழில்நுட்ப பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக நாடாளுமன்ற இணையத்தளத்தில் பதிவாகியுள்ள எம்.பி.க்களின் தொலைபேசி இலக்கங்களினை பயன்படுத்தி பல்வேறு நபர்களினால் அவதூறு ஏற்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.