யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் எரிபொருள் முறைகேடுகள் தொடர்பில் அறிவிக்குமாறு பலாலி இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. இதன்படி 0776344246 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியின் ஊடகப் பிரிவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பதுக்கல், பாரபட்சம் மற்றும் ஊழல் செயற்பாடுகள் தொடர்பாக பொதுமக்கள் தமது தகவல்களை அறிவிக்க முடியும். தற்போது எரிபொருள் விநியோகம் இராணுவ கண்காணிப்பில் செயற்படுத்தப்பட்டு வருகிறது.