கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் நேற்று இரவு ஏற்ப்பட்ட அமைதியின்மையில் பலர் தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்ப்பட்ட முறுகல் நிலைமை காரணமாக அமைதியின்மை ஏற்ப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில், நிலைமையை இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
அமைதியின்மை ஏற்ப்பட்ட போது சுமார் 600 கைதிகள் இவ்வறு புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, குறித்த நபர்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்க்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.