யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையம் எரிபொருள் இல்லாது மூடப்பட்டிருந்த வேளையில் நேற்று (2022.06.28) இரவு எரிபொருள் பம்பியை திறந்து காரில் வந்த நபர் ஒருவருக்கு சுமார் 8கொள்கலனில் ( 1கொள்கலன் 20 லீற்றர்) வழங்க முற்ப்பட்ட வேளையில் அப்பகுதி இளைஞர்களால் சுற்றி வளைக்க முற்பட்ட பொழுது இளைஞர் ஒருவரை எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரும் காரில் வந்த நபரும் சேர்ந்து தாக்கிவிட்டு 4 கொள்கலனில் பொற்றோலை பொற்றுக்கொண்டு மிகுதி 4 கொள்கலனை விட்டுவிட்டு காரில் தப்பினேன் பிழைத்தேன் என்று ஒடி விட்டார் .
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த கோப்பாய் பொலிஸார். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காரில் வந்த நபர் விட்டுச்சென்ற கொள்கலன்களை பொலிஸார் வருகைதந்த 0610 என்ற இலக்கத்தகடுடைய ஜூப்பில் ஏற்றி விட்டு அங்கு நின்ற இளைஞர்களை கலைக்கமுற்பட்ட பொழுது அவ்விடத்தில் பதற்ற நிலை ஒன்று ஏற்ப்பட்டது . பின்னர் இளைஞர்களை சமாதானபடுத்திவிட்டு பொலிஸார் சென்றுவிட்டனர்..
பொலிஸார் சென்ற சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்க்கு வருகைதந்த இராணுவத்தினர் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இராணுவமும் இளைஞர்களும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந் வேளையில் மிண்டும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பொலிஸார் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் தாங்கள் வந்த வாகனத்தை நடு வீதியில் நிறுத்திவிட்டு நின்றனர் . இராணுவத்தினர் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தையின் பின்பு கலைந்து சென்றனர் . பின் இளைஞர்கள் கலைந்து சென்றதும் பொலிஸார் வாகனத்தை வீதி ஓரமாக நிறுத்திவிட்டு நின்றனர் . பொலிஸாரின் அடாவடித்தனம் மிகவும் தலைவிரித்தாடுகிறதாக அப்பகுதி இளைஞர்கள் குற்றம் சுமத்தினார்….
வீடியோ இணைப்பு