இலங்கையின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்கள் இன்று தொடக்கம் 2 நாட்களுக்கு யாழ்ப்பாணத்துக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார் . அமைச்சர் கொழும்பில் இருந்து அதிகாலை புறப்பட்ட அதிவேக புகையிரத மூலம் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்க்கு 12.15pm வருகைதந்தார் .அமைச்சரை வரவேற்பதற்க்கு பௌத்த இந்து கலாச்சார பேரவை மற்றும் புகையிரத பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.அதன் பின்னர் கௌரவ அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தார்.
மதியம் புகையிரதம் மூலம் யாழ்ப்பாணம் வந்தடைந்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று மாலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்க்கு விஜயம் மேற்கொண்டு ஆலய தரிசனத்தில் ஈடுபட்டார்….