இப்பொருட்கள் பங்கீட்டு அடிப்படையில் நாடு முழுவதும் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது.எமது மக்களுக்காக தொடர்ச்சியாக உதவிகளை மேற்கொண்டுவரும் இந்திய அரசுக்கு மிக்க நன்றி.
தமிழக மக்களின் உதவியுடன் தமிழக அரசால் இரண்டாம் கட்டமாக இலங்கை மக்களுக்காக வழங்கப்பட்ட 3 பில்லியன் இலங்கை ரூபாவிற்கும் அதிகபெறுமதியான மனிதாபிமானஉதவி பொருட்களுடனான கப்பல் தூத்துக்குடியிலிருந்து கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.
15000 மெட்ரிக்தொன் தொகுதியில் அரிசி, பால்மா மற்றும் அத்தியாவசிய மருந்துகள் அடங்கியுள்ளன.
இந்த பொருட்கள் இன்று இந்திய உயர் ஸ்தானிகரால் வழங்கி வைக்கப்பட்டன. இதில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அங்கஜன் இராமநாதன் பல்வேறு பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த உதவிகள் மேலும் தொடரும் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.