வரகாபொல தும்மலதெனிய பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரி ஒருவருக்கும் பொலிஸ் உத்தியோகத்தருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து அங்கு நின்றவர்களால் இவர்களை இழுத்து சமாதானப்படுத்தினர். மோதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இராணுவ லெப்டினன்ட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.