தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு

தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு! அமைச்சரின் தகவல்
தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார உறுதியளித்துள்ளார்.

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளம் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப அதிகரிக்கப்படும் என்றும் அதற்குத் தேவையான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

உயர்த்தப்படும் தனியார் துறையினரின் வேதனம்
புதிதாக வரும் தொழில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், முதலீட்டாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், வேலைகளின் தரத்தை மேம்படுத்தவும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மாற்ற வேண்டும்.

ஆண், பெண் பாகுபாடு காட்டும் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். பாலின நடுநிலையான வேலை உலகத்தை நாம் உருவாக்க வேண்டும்.

இன்று தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு வாழ்கிறார்கள் என்று எல்லோரும் சொல்கிறார்கள். இது நூற்றுக்கு நூறு உண்மை கதை. உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. எரிபொருள் பெற்றுக்கொள்வது கடினம்.

எனவே, தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.
அதன்படி, எதிர்காலத்தில் நிலையான குறைந்தபட்ச ஊதியத்தை விதித்து, தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதியான நிலைக்கு உயர்த்துவோம்.

மேலும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தி தோட்டத் தொழிலாளர்களுக்கும் உறுதியான சம்பள உயர்வை வழங்க வேண்டும். அவர்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *