கண்டி- குருநாகல் வீதியில் அலதெனியா மற்றும் ஹேதெனிய ஆகிய பிரதேசங்களில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மக்கள் பல நாட்கள் காத்திருந்தாலும் குருநாகல் பிரதேசத்தின் அரசியல்வாதியொவருக்கு தனது வாகனங்களுக்கு முன்னுரிமையில் டீசல், பெற்றோல் நிரப்ப வேண்டும் என எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கோரியுள்ளார்.
மக்கள் எத்தனை பேர் வரிசைகளில் காத்திருந்தாலும் குறித்த அரசியல்வாதியின் பஸ் மற்றும் காருக்கு எவ்வித கட்டுபாடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த அரசியல்வாதி பல போக்குவரத்து பஸ்களுக்கு சொந்தக்காரர் என்றும் குறித்த பஸ்கள் குருநாகல்- கண்டி, மெதவல- கண்டி, ஹேதெனிய ஆகிய இடங்களில் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுகின்றன.