இன்று மாலை பூநாறிமட சந்திக்கு அருகாமையில் பேருந்து உடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் முந்தி செல்ல முற்பட்ட வேளையிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரின் அதிவேகமே விபத்துக்கு காரணம் என கூறப்படுகின்றது.
