ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

நிதியமைச்சின் நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றுள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சிலரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

   இதேவேளை,காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டம் காரணமாக கொழும்பு – லோட்டஸ் சுற்றுவட்டத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் இரு பிரதான நுழைவாயில்களையும் மறித்து மேடை அமைத்து, காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக, அவ்வீதியூடான போக்குவரத்து தற்சமயம் பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *