போர் முடிவுக்கு வர எவ்வளவு காலம் பிடிக்கும் என்று தெரியாது. உக்ரைன் ஐனாதிபதி

உக்ரைனில் போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று யாருக்கும் தெரியாது என்று அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். தனது தினசரி காணொளி உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டின் கிழக்கில் ரஷ்ய துருப்புக்களின் கைப்பற்றும் நடவடிக்கைகளை தமது ஆயுதப்படைகள் தடுத்து வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்ய முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்திய உக்ரேனியர்களைப் பற்றி பெருமிதம் கொள்வதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்தார்.

செய்த அனைத்திற்காகவும் வருந்தும் ரஷ்யர்கள்

“மே மாத தொடக்கத்தில், டான்பாஸ் அனைத்தையும் ரஷ்யா கைப்பற்றும் என்று எப்படி நம்பினார்கள் என்பதை நினைவில் கொள்க? இது ஜூன் மாதம், போரின் 108வது நாளாகும். டான்பாஸை தொடர்ந்து பிடித்துக்கொண்டிருக்கிறார்.

” ரஷ்யாவின் படையானது போரின் ஆரம்ப நாட்களில் தலைநகர் கெய்வைக் கைப்பற்றத் தவறியது, பின்னர் டான்பாஸில் கவனம் செலுத்தும்படி கட்டாயப்படுத்தப்பட்டது, மேலும் ரஷ்ய மொழி பேசும் பிராந்தியத்தின் பகுதிகளைக் கைப்பற்ற முயற்சித்தது. எ

வ்வாறாயினும், போருக்கு முடிவு இன்னும் காணப்படவில்லை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்தார், உக்ரைன் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, ரஷ்யர்கள் “அவர்கள் செய்த அனைத்திற்கும் வருந்துகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *