நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது சீனாவை விட இந்தியா அதிக அளவில் உதவுவதாக இந்தியாவின் WION தொலைக்காட்சி நிர்வாக ஆசிரியர் பல்கி ஷர்மாவுடனான பிரத்தியேக நேர்காணலில், பிரதமர், ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சீனாவும் சில வழிகளில் உதவினார்கள், ஆனால் நாங்கள் இந்தியாவில் கவனம் செலுத்தியதால் பெரிய உதவி ஏற்பாடுகள் வரவில்லை என தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி வர முன்பே இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன். நிதி மற்றும் வெளியுறவு அமைச்சர்களுடன் தொடர்பில் இருந்தேன். எஸ்.ஜெய்சங்கரையும் அபுதாபியில் சந்தித்தபோது, நாங்கள் பேசினோம். நெருக்கடி வரும் என்று நான் அவரிடம் நீண்ட நேரம் கலந்துரையாடினேன் என்றார்.
கடினமான காலங்களில் சீனா தம்மை கைவிட்டதாக இலங்கை அரசாங்கம் நம்பவில்லை என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியுடன், அவர்கள் (சீனா) சில மாதங்களாக அமைதியாக இருக்கிறார்கள். முன்னைய அரசு இதற்கு முன்னர் என்னவிடயங்களை பேசியது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் சீனாவுடன் பேசத் தொடங்க விரும்புகிறேன்.
மேலும் அவர்களை நன்கொடையாளர் மாநாட்டில் பங்கேற்கவும். அந்த வழியில் உதவி பெறவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர், என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவை நோக்கி தனது அரசாங்கத்தின் எதிர்கால நிலைப்பாட்டை விளக்கினார்.
தொலைக்காட்சி நேர்காணல் செய்த பல்கி ஷர்மா தனது கேள்வியில் உங்களுக்கு 73 வயதாகின்றது ஓய்வுபெறுவது பற்றி நினைக்கவில்லையா என கேட்டார்.
இதற்கு பதலளித்த பிரதமர் சீனாவின் டெங்சியோபிங் கூட 73 வயதில் கூட பதவியேற்றார் வயது இதற்கு ஒரு பிரச்சினையில்லை என்றார்.
இந்திய பிரதமருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேட்டபோது – அவருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.