இந்தியாவிடமிருந்து கடனில் இறக்குமதி செய்யப்பட்டுவந்த எரிபொருளில், கடைசி எரிபொருள் தாங்கி கப்பல் இம்மாதம் 16ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது. இதன் பின் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முறை தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர் எரிபொருள் உதவி கிடைக்கும் என அரசாங்கம் நம்புகிறது. இதற்கான கோரிக்கை இந்தியாவிடம் வைக்கப்பட்டுள்ளது.
20 நாட்களுக்கு முன் வந்த பெற்றோல் கப்பலுக்கு, செலுத்த டொலர் இல்லாமல் துறைமுகம் அருகே நங்கூரமிட்டுள்ளது.