பஷில் ராஜபக்ஷ இற்கு பதிலாக பாராளுமன்றம் வருகின்றார் பிரபல வர்த்தகர்

இராஜினாமா செய்த பஷில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற ஆசனத்திற்கு பதிலாக இலங்கையின் முன்னணி பணக்காரரும், வர்த்தகருமான தம்மிக்க பெரேரா நாடாளுமன்றம் வரவுள்ளதான தகவலையடுத்து அவரது பல வர்த்தக நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன. மறுபக்கம் இவர் பாராளுமன்றம் வரவுதற்கு சட்டரீதியான தடையும் ஏற்பட்டுள்ளது. பல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளராகவும், பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இருப்பதால், அவர் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னரே அதனை விட்டு விலகியிருக்க வேண்டும்.அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவருக்குச் சொந்தமான நிறுவனம் அரசாங்கத்துடன் டீல் செய்தால், அந்த ஆசனம் இரத்து செய்யப்படும்.எவ்வாறாயினும், இது தொடர்பான சட்ட சிக்கல்கள் தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவர் நாடாளுமன்ற உறுப்பினரான பின் முதலீட்டுத் துறை அமைச்சராக அவர் பதவியேற்பார் என்று உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *