இந்தியாவின் உலகசாதனை பயணத்தை முடித்தது தென் ஆப்பிரிக்க அணி

இந்தியா- தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதிய முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.

12 தொடர்ச்சியான வெற்றிகள் பெற்று உலகசாதனையை நோக்கி காத்திருந்த நிலையில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது.அதிகபட்சமாக இஷான் கிஷன் 76 ஸ்ரேயாஸ் அய்யர் 36 , ஹர்திக் பாண்ட்யா 31 , ரிஷப் பண்ட் 29 ரன்கள் சேர்த்தனர்.

இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின்னர் 3 இலக்கத்தில் அனுப்பப்பட்ட அதிரடி காட்டிய பிரிட்டோரியஸ், 29 ரன்களில் வெளியேறினார். போட்டியில் துடுப்பாட்ட வேகத்தை அதிகரித்த வீர்ர் இவராவார். குயின்டன் டி காக் 22 ரன்களே சேர்த்தார்.அதன்பின்னர் வான் டெர் டுஷன்-டேவிட் மில்லர் ஜோடி, இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவாலாக விளங்கினர். பந்துகளை சிக்சர்களாக பறக்க விட்ட இந்த ஜோடி, விரைவாக அரை சதம் கடந்ததுடன், அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். கடைசி 12 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில், ஹர்ஷல் பட்டேல் பந்துவீச வந்தார்.அவர் வீசிய 19வது ஓவரில் 8 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார் வான் டெர் டுஷன்.ஒன்பதாவது ஓவரில் 212 ரன்களைத் துரத்திய தென்னாப்பிரிக்கா 81-3 என்று இருந்தது.டேவிட் மில்லர் மற்றும் ராஸ்ஸி வான் டெர் டஸ்ஸென் இருவரும் இணைந்து 64 பந்துகளில் 131 ரன்களை குவித்து, தென்னாப்பிரிக்காவின் அதிகபட்ச வெற்றிகரமான சேஸிங் எனும் சாதனைக்கு வழிசமைத்தனர் .

இதனால் தென் ஆப்பிரிக்க அணி 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ரிஷாப் பான்ட் தலைவராக அறிமுகமான இந்த போட்டி இந்தியாவிற்கு ஒரு மோசமான தோல்வியை பெற்றுக் கொடுத்துள்ளது, இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இருக்குமாக இருந்தால் உலக டுவென்டி டுவென்டி கிரிக்கெட்டில் ஒரு புதிய உலக சாதனையை படைத்த பெருமை இந்தியாவிற்கு கிடைத்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *