இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு ஏப்ரல் மாதத்தைவிட மே மாதத்தில் 108 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.
ஏப்ரல் மாதம் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 1812 மில்லியன் டொலராக இருந்த நிலையில் மே மாதம் 1920 மில்லியன் டொராக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 5 மாதங்களில் முதல் தடவையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.