3000 மெட்ரிக் தொன் எரிவாயு கப்பல் நாளை நாட்டுக்கு வருகிறது
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுக் கப்பல் நாளை (4) இலங்கைக்கு வரவுள்ளது.
கப்பலில் சுமார் 3,000 மெட்ரிக் தொன் எரிவாயு கையிருப்பு இருப்பதாக நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் கிடைக்கவில்லை, டொலர் நெருக்கடி காரணமாக நாட்டில் எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட் டுள்ளது.