தொலைபேசி கட்டணங்களும் இன்றிரவு முதல் அதிகரிப்பு

இலங்கையில் தொலைத்தொடர்பு வரி இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
அதற்கமைய குறித்த வரியானது 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அண்மையில் பெறுமதி சேர் வரி (வட் வரி) 12%ஆக அதிகரிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தொலைத்தொடர்பு வரியானது 15%ஆகவும் அதிகரிக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. தொலைபேசி மற்றும் இணையத்தள சேவைக் கட்டணங்கள்

இதனை தொடர்ந்து வரி அதிகரிப்பு காரணமாக தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *