இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட சுவசரியா அம்புலன்ஸ் உயிர்காக்கும் சேவை சுமூகமாக இயங்குவதற்கு இந்தியா அரசு மருந்துகளை வழங்கியுள்ளது. இதனை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் 3.3 தொன்கள் மருந்துகளை இன்று கையளித்தார்.
கடந்த இரு மாதங்களில் இந்தியாவினால் வழங்கப்பட்ட 370 மில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மருத்துவ உதவியின் ஒரு பகுதியாக இத்தொகுதி வழங்கப்பட்டுள்ளது.