சீன அரசாங்கத்தால் 500 மில்லியன் யுவான் மானியமாக வழங்க உள்ளதாகவும், அதன் முதல் தொகுதியில் மருந்துகள் நாளை வெள்ளிக்கிழமை (3) CX3119 விமானத்தில் நள்ளிரவு நாட்டிற்கு வரும் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
மொத்த அளவு 4.3 மெட்ரிக் தொன் எடை கொண்டது.
இந்த மானியம் 6 மாதங்களுக்கு இலங்கைக்கு பயன்பாட்டிற்கு போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு தொகுதியும் இம் மாதத்தின் இரண்டாம் வார பாதியில் கிடைக்கும்.
இதில் முதல் தொகுதியில் 10 மில்லியன்யுவான் மதிப்புள்ள 512,640 உயிர்காக்கும் Enoxaparin Sodium Injection கிடைக்கவுள்ளன.
எனோக்ஸாபரின் சோடியம் என்பது இரத்த உறைவு எதிர்ப்பு மருந்து ஆகும், இது பொதுவாக கர்ப்ப காலத்தில் மற்றும் சில வகையான அறுவை சிகிச்சைகள் உட்பட ஆழமான நரம்பு இரத்த உறைவு (DVT) மற்றும் நுரையீரல் embolism (PE) சிகிச்சை மற்றும் கடுமையான acute coronary syndrome (ACS) மற்றும் மாரடைப்பு அல்லது ஹீமோடையாலிசிஸின் போது பயன்படுத்தப்படுகிறது.
