வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா, சற்று முன்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவை கைது செய்வதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை துமிந்த சில்வாவைவுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு செயற்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்திய உயர் நீதிமன்றம், அவரை உடனடியாக கைது செய்யுமாறு நேற்று குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
அத்துடன் நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்த குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உதவுமாறு சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.இதனை தவிர உயர் நீதிமன்றம் துமிந்த சில்வாவின் கடவுச்சீட்டை முடக்கியும் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. .
ஹிருணிகா வெளியிட்ட தகவல்
வலிப்பு நோய் காரணமாக வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலையின் தகவல்கள் கூறுகின்றன.
துமிந்த சில்வாவை கைது செய்ய உயர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதாகவும் அவரது உடல் நிலைமை மோசமாக இல்லை என்றால், அவர் கைது செய்யப்படுவார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கூறியுள்ளார்.