நாடாளுமன்றம் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளது.சபாநாயகர் தலைமையிலான கூட்டம்
நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழுவின் கூட்டம் நாளை முற்பகல் 9.30 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களது உணவு விவகாரம் தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை
நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் உணவு தமக்கு தேவையில்லை எனவும், வெளியில் இருந்து உணவு கொண்டு வந்து உண்பதற்கு அனுமதிக்குமாறு எம்.பிக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.