கடும் நிதி நெருக்கடி காரணமாக மத்தள சர்வதேச விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடி, விமான நிலைய பராமரிப்பதில் உள்ள சிரமங்கள் மற்றும் விமான சேவை பற்றாக்குறை காரணமாக இந்த விமான நிலையங்களைத் தொடர்வது இயக்குவ பெரும் பிரச்சினையாக இருப்பதாக துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

குறிப்பாக இரண்டு விமான நிலையங்களில் ஊழியர்களுக்கே பெரும் செலவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மத்தள விமான நிலையத்தில் கடமைக்காக ஊழியர்களை ஏற்றிச் செல்லும் சொகுசு பஸ் ஒன்று கட்டுநாயக்காவில் இருந்து மத்தள வரை அதிக செலவில் தினமும் பயணிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இரத்மலானை விமான நிலையம் தனிமைப்படுத்தப்பட்ட விமான நிலையமாகவே உள்ளது என அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான சேவை என்று கடந்த மார்ச் 27ஆம் திகதி சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன், அன்றைய தினம் கன்னிப் பயணத்திற்காக வந்த மாலைதீவு தேசிய விமானம் பயணிகள் இன்றி வெறுங்கையுடன் திரும்பியது.

அன்றைய விமான நிலைய திறப்பு விழாவிற்கு மட்டும் சுமார் 8 மில்லியன் ரூபா செலவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Lankadeepa )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *