இன்றைய தினம் எரிவாயுவை பெற்றுக்கொள்ள கூடிய இடங்கள்

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் எரிவாயு கொள்வனவு செய்யவுள்ளவர்களுக்கு அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் இன்று எரிவாயு விநியோகிக்கப்படும் இடங்கள் தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
சுமார் 8 நாட்களுக்குப் பின்னர் நேற்று முதல் சந்தைக்கு எரிவாயு விநியோகம் ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தினமும் 50,000 எரிவாயு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மின்பட்டியல் அடிப்படையில் எரிவாயு விநியோகம்

மின்பட்டியலின் அடிப்படையில் குடும்பமொன்றுக்கு மாதாந்தம் ஒரு எரிவாயு கொள்கலன் வீதம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போதைய எரிவாயு பற்றாக்குறையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பலரும் ஒரே நேரத்தில் பல சிலிண்டர்களை கொள்வனவு செய்து அவற்றை கூடிய விலைக்கு விற்று வருவதாக லிட்ரோ நிறுவனத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தடுக்கும் வகையிலும் அனைவருக்கும் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் மின்பட்டியல் அடிப்படையில் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எரிவாயு விநியோகிக்கப்படும் இடங்கள் தொடர்பிலான முழுமையான விபரப் பட்டியல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *