கட்சியுடன் கலந்தாலோசிக்காது தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ள மகிந்த அமரவீர மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு எதிராக உரிய நேரத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சட்டம் அனைவருக்கும் பொதுவானது
ஒரு கட்சிக்குள் இரண்டு சட்டங்கள் இருக்க முடியாது எனவும் சட்டம் அனைவருக்கும் பொதுவானது எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.