விமானங்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கடைசியாக திரும்பும் பயணங்களுக்கு போதுமான ஜெட் எரிபொருளை வேறு இடங்களில் நிரப்புமாறு இலங்கை விமானங்களின் விமானிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் இயக்குனர் ரெய்ஹான் வன்னியப்பா தெரிவித்துள்ளார்.
துபாயின் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் உட்பட இலங்கைக்கு பறக்கும் விமான நிறுவனங்கள் — தேவைக்கு அதிகமாக எரிபொருளை (Full tank) ஏற்றிச் செல்கின்றன — அதே சமயம் இலங்கை விமானங்கள் தென்னிந்திய நகரமான சென்னை மற்றும் டுபாயில் நீண்ட தூர விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப பயன்படுத்துகிறது,
இந்தியன் ஓயில் நிறுவன அதிகாரியின் கூற்றுப்படி, தென்னிந்திய விமான நிலையங்களில் இலங்கையின் சர்வதேச விமானங்கள் எரிபொருள் நிரப்புதல் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின் தலைவர் ஜி.ஏ.சந்திரசிறி கூறுகையில், இதனால் விமான நிலையம் மற்றும் விமான சேவை நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் மூன்று மாதங்களின் பிறகு சபுகஷ்கந்த சுத்திகரிப்பு ஆலை இயங்க தொடங்க ஆரம்பிக்கவுள்ளதால் இந்த நெருக்கடி குறையும். ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் கப்பல் வந்து இறக்கப்பட்டுள்ளது. இதனால் பிரச்சினை விரைவில் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.