இன்று மதியம் 2.30 மணியளவில் அரியாலை பூம்புகார் நாவலடிப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவை அண்டியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் அல்லைப்பிட்டியை சேர்ந்த 29 வயதுடைய அரவிந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அப்பகுதியில் ஒன்று கூடிய பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் 3.15 மணியளவில் உயிரிழந்தவரின் உடலம் புகையிரதம் முலம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது


