3,500 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பலொன்று இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
எனினும் நாளை வரையில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் முதல் எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக இன்றும் நாளையும் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.