அடுத்த சில மாதங்களுக்குள் உலக வங்கி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையை உலக வங்கி மறுத்துள்ளது.
போதுமான சிறந்த பொருளாதாரக் கொள்கைக் கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க உலக வங்கி திட்டமிடவில்லை என்று
இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் Faris H. Hadad-Zervos தெரிவித்துள்ளார்.