அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கையில் நிலவும் மருந்து தட்டுப்பாடு பிரச்சினை, இரண்டு மாதங்களுக்குள் தீர்க்கப்படும் எனவும் மருந்து இறக்குமதிக்காக 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மருந்துகளை கோரியதன் பின்னரே மருத்துவ நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தி பணிகளை ஆரம்பிக்கும் என்பதால், மருந்துகளை இறக்குமதி செய்ய மூன்று மாதங்கள் ஆகும்.
எனினும் இந்த விடயம் தொடர்பில் முன்னணி மருந்து நிறுவனங்களிடம் கலந்துரையாடப்பட்டுள்ளதோடு இரண்டு மாதங்களுக்குள் அவர்கள் மருந்துகளை விநியோகிப்பதாக உறுதியளித்துள்ளனர்.உயிர் காக்கும் மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்